திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி அசத்திய மணப்பெண்..!

0 3809
திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி அசத்திய மணப்பெண்..!

தூத்துக்குடியில் திருமண ஊர்வலத்தின் போது மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் - நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தினார்.

அத்தோடு, பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அசர வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments