மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கேட் போட்டி : தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

0 3557
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கேட் போட்டி : தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிரேனடாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக அளவாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் அலன் சிக்சர் அடித்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 166 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments