இரண்டு கோடி கோவாக்சின் தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்

0 3930

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவன கோவேக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக பிரேசில் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 கோடி கோவேக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதில் போட்டப்பட்ட ஒப்பந்தத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தடுப்பூசி கொள்முதலில் பாரத் பயோடெக் நிறுவனம் விதிமுறைகளை மீறியதாகவும், சட்ட  விரோத போக்கை கடைபிடித்தாகவும் பிரேசில் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

தடுப்பூசி  கொள்முதலில் முறைகேடுகள்  நடந்துள்ளதா என்பதை தீர விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளை கையாள்வதில் குளறுபடி, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மெத்தன போக்கை கடைபிடித்தது உள்ளிட்டவைகளால் அதிபர் மீது கட்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments