கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் மீண்டும் முதலிடம்

0 3090

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிப்பளவில் முதலிடம் என்ற மோசமான இடத்துக்குச் சென்றது. 

நேற்று முன்தினம் கணக்கீட்டின்படி 37 ஆயிரம் பேருக்கு தொற்று என்ற அளவில் இந்தியா முதலிடத்திலும், 28 ஆயிரம் பேருக்கு கொரோனா என்ற அளவில் பிரேசில் 2ம் இடத்திலும் இருந்தன. இந்நிலையில் நேற்று மட்டும் அந்நாட்டில் ஆயிரத்து 800 பேர் பெருந்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் இதுவரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments