இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் மீண்டும் புத்துயிர் பெற்ற மலைச்சிகரங்கள்

0 1925

இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அங்கு சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து மலைச் சிகரங்களான நார்கண்டா மற்றும் ஹாட்டு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அற்புதமான இயற்கைப் பேரழகுடன் குளிர்ச்சியான பருவநிலையை சுற்றுலாப் பயணிகள் ரசித்து அனுபவிக்கின்றனர். ஊரடங்குகளால் முடங்கிக்கிடந்த தொழில்களும் படிப்படியாக மீளத் தொடங்கி சிறிய கடைகள் ஏராளமாகத் திறக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக டெல்லியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மற்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments