யூரோ கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதியில் இங்கிலாந்து- உக்ரைன் அணிகள்..!

0 3676

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

2-ஆம் பாதியில் 75 மற்றும் 86-வது நிமிடங்களில் இங்கிலாந்து வீரர்கள் Raheem Sterling மற்றும் Harry Kane ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். உள்ளூரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக பதில் கோல் அடிக்க ஜெர்மனி வீரர்கள் எடுத்த முயற்சி அனைத்து வீணாகின.இறுதியில் 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments