"கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் சுவிட்சர்லாந்து சென்று வரலாம்" இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து புதிய சலுகை.!

0 3525

2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் சுவிட்சர்லாந்து செல்ல எவ்வித தடையும் இல்லை என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு வருவதை முன்னிட்டு கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு கூட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் சுவிட்சர்லாந்து வந்தால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களை பல ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்காத நிலையில், அந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளதால் 2 டோஸ் கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் எவ்வித தடையும் இன்றி சுவிட்சார்லாந்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments