தமிழ்நாட்டில் மேலும் 4,512 பேருக்கு கொரோனா தொற்று; 6,013 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3634

மிழ்நாட்டில் மேலும் 4,512 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. ஒரே நாளில் 6,013 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

செங்கல்பட்டை சேர்ந்த 28 வயது இளைஞர் உள்பட மாநிலத்தில் பெருந்தொற்றுக்கு மேலும் 118 பேர் பலியாகினர். அவர்களில் 24 பேருக்கு இணை நோய்கள் இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 335ஆக சரிவடைந்துள்ளது. சென்னையில் புதிதாக 275 பேருக்கு மட்டும் கொரோனா உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 563ஆக சரிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் 493 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 281 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments