இது வரை 27.27 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்

0 2028
இது வரை 27.27 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்

து வரை 27 கோடியே 27 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோசும், 5 கோடியே 84 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோசுகளும் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால், கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 96 புள்ளி 9 சதவிகிதமாக உள்ளது என்றார்.

இரண்டாம் அலையின் பாதிப்பு உச்சிக்கு சென்ற பிறகு இப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் கூறினார்.

இது வரை நாட்டில்  51 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments