அதிவேகமாக வந்து முன்னால் சென்ற ஆட்டோ மோதிய சொகுசுக் கார் ; விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து விசாரணை

0 2638
குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட சொகுசுக்கார் ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்து

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட சொகுசுக்கார் ஆட்டோ ஒன்றின் மீது மோதி தூக்கி வீசும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றில் மது அருந்திவிட்டு, முழு போதையில் சுஜித் என்ற நபரும் ஆசிஷ் என்ற அவனது நண்பனும் ஆடி காரில் அதிவேகமாக வந்துள்ளனர். மாதாபூர் என்ற இடத்தின் அருகே, இவர்களது கார் முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதி தூக்கி வீசியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 37 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments