அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை ; போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

0 3011
அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

டீசல் விலை உயர்ந்தாலும் அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூசுவது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments