அப்டேட் வெளியிட்டது ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு..! உற்சாகத்தில் ரசிகர்கள்

0 3918

பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் படபிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் ரத்தம் ரணம் ரவுத்திரம் என்ற இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ள படக்குழு, 2 பாடல் காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments