செல்போன் நெட்வொர்க்கிற்காக மரத்தின் மீது ஏறிய சிறுவன் மின்னல் தாக்கி பலி;மேலும் 3 சிறுவர்கள் காயம்

0 2367
செல்போன் நெட்வொர்க்கிற்காக மரத்தின் மீது ஏறிய சிறுவன் மின்னல் தாக்கி பலி

மகாராஷ்ட்ராவில் செல்போன் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்தான்.

பால்கர் (Palghar) மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் கால்நடை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு சென்றனர்.

அப்போது செல்போனில் நெட்வொர்க் கிடைக்காததால் 4 பேரும் மரத்தில் ஏறிய நிலையில் அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் ரவீந்திர கோர்டா என்ற சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments