ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்

0 3249
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்

ன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தும், தனியார் பள்ளிகள் அதை மீறுவதாக மனுதாரர் புகார் கூறியிருந்தார்.

ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும்,  இணையதள வசதியையும் கொரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்  கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி  அமர்வு, தமிழ்நாடு அரசு அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்கஉத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments