குஜராத் டாங் மாவட்டத்தில் செல்பி எடுத்தால் தண்டனை..

0 3306
குஜராத் மாநிலத்தின் இயற்கை அழகு நிறைந்த டாங் (Dang) மாவட்டத்தில், சுற்றுலா தலங்கள் உள்பட எந்த இடத்திலும் செல்பி எடுப்பது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் இயற்கை அழகு நிறைந்த டாங் (Dang) மாவட்டத்தில், சுற்றுலா தலங்கள் உள்பட எந்த இடத்திலும் செல்பி எடுப்பது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை துவங்கியுள்ள நிலையில் டாங் மாவட்டத்தின் இயற்கை அழகினை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் அழகை ரசிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு சென்று செல்பி எடுப்பதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் இது போன்ற பல துயரசம்பவங்கள் நடந்ததை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் டாங் மாவட்டத்தில் செல்பி எடுத்தால் அரசு அதிகாரியின் உத்தரவை மீறியதாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments