குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட கார்.. 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்து

0 4881
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட கார் 40அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்து கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட கார் 40அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்து கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.   

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், தனது நண்பர்கள் 3 பேருடன் மது விருந்துக்குச் சென்று விட்டு போக்ஸ்வேகன் காரில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

கார் வடக்கிபாளையம் மேம்பாலத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து, அங்கிருந்த வீட்டின் மீது விழுந்தது.

image

வீட்டின் முன்புறத்தில் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்த நிலையில், காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஏர் பேக் ஓப்பன் ஆகி காயத்துடன் உயிர் தப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments