ஜம்மு காஷ்மீர் பரிம்பூராவில் கைது செய்யப்பட்ட லஷ்கர் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

0 2052
ஜம்மு காஷ்மீர் பரிம்பூராவில் கைது செய்யப்பட்ட லஷ்கர் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

ம்மு காஷ்மீர் பரிம்பூராவில் கைது செய்யப்பட்ட லஷ்கர் முக்கிய தீவிரவாத நதீம் அப்ராரும், அவனது பாகிஸ்தான் கூட்டாளி ஒருவனும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரிம்புராவில்  நடந்த வாகன சோதனையில் போலீசாரை சுட முயன்ற போது  2 பேர் பிடிபட்டனர். அவர்களில்  ஒருவன் முக்கிய தீவிரவாதியான நதீம் அப்ரார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அப்போது தமது ஏகே 47 துப்பாக்கியை, மலூரா என்ற இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக நதீம் அப்ரார் கூறினான்.

இதை அடுத்து அவனை பாதுகாப்பு படையினர் அங்கு கொண்டு சென்றபோது வீடு ஒன்றில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். அதில் CRPF  வீரர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் நதீம் அப்ராரும், பாகிஸ்தான் தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகளும், ஏராளமான வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments