மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4589
மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மின் கணக்கீட்டில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேசிய அவர், மின் வாரியம் வாங்கியுள்ள 1லட்சத்து59ஆயிரம் கோடி கடனுக்காக 9புள்ளி 6 சதவீதம் வட்டி செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

இதனை குறைத்து 2000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டதாகவும், அரைமணி நேரம் மின் விநியோகம் நின்று விட்டாலும் மின் பணியாளர்களுக்கு போன் செய்வதாகவும் கூறினார். கடந்த ஆட்சியில் அதிகமான தொகையை செலவழித்து மின்சாரம் வாங்கியுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments