காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர கணவன்..

0 5299
ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்‍.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்‍.

இங்குள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்‍.அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய போலீசார்,அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்‍.

இதில் அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஸ்ரீகாந்த் என்பவர்,தனது காதல் மனைவி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் எடுத்து வந்து கொளுத்தியது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments