உடலில் 16 இடங்களில் சூடு... மனைவியை கட்டிப் போட்டு கணவன் செய்த கொடுமை..! காதலி தூண்தலில் சித்ரவதை

0 5641

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடித்தனம் நடத்தி வரும் கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு போட்டு சித்தரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்த பாண்டியனுக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 5 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ள நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி இறந்ததை அவர் மறைத்த தகவல் கலைவாணிக்கு தெரியவந்ததால், அதுகுறித்து கேட்ட போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு உருவாகியுள்ளது.
மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வீட்டுக்கு வருவதை தவிர்த்த பாண்டியன், 3 வதாக பென்னாகரம் அடுத்த நெருப்பூரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளான்.

காதலியின் பேச்சைக் கேட்டு கலைவாணியை , வேறு பல ஆண்களுடன் தொடர்புபடுத்தி தரக்குறைவாக பேசியதோடு, மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தாய் வீட்டிற்க்கு விரட்டி உள்ளான். பின்னர் ஊர் பொது மக்கள் சமாதானம் செய்து கலைவாணியை கணவனுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கலைவாணியை வலுகட்டாயமாக குடிக்கவைத்துள்ளனர். அவர் மயக்கமடைந்து அரை மயக்கத்தில் இருந்த நிலையில் கலைவாணியின் கை, கால், மார்பு மற்றும் அந்தரங்க பகுதி என உடல் முழுவதும் 16 இடங்களில் பழுக்கை காய்ச்சிய இரும்பு கம்பியால் ஈவிரக்கமின்றி சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போது அலறல் சத்தம் வெளியே கேட்டுவிடகூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கால்களை கட்டிவைத்தும், வாயில் துணி வைத்து இறுக்கமாக கட்டிவிட்டுள்ளனர். 1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கிருந்து தப்பி தாய்வீட்டுக்குச் சென்று தனக்கு நடந்த சித்ரவதையை பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார் கலைவாணி.

இதையடுத்து கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் ஆறிய நிலையில் தனக்கு நிகழ்ந்த கொடுமையை புகைப்பட ஆதாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும், கணவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற கலைவாணி, தனது கணவர் பாண்டியன் அவரது பெற்றோர் மற்றும் கணவருடன் தகாத உறவு வைத்துள்ள பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தார்

3 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு, முறையாக தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட மனைவியை உடல் எல்லாம் சூடுவத்து சித்ரவதை செய்த கொடூர கணவனையும் அவனது குடும்பத்தாரையும், காதலியையும் கைது செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments