பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை 3-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

0 2464
பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை 3-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மாணவிகளின் பாலியல் புகார்களுக்கு உள்ளான சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிவசங்கர் பாபாவை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 18-ந்தேதி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இடையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை தள்ளிப்போனது.

சிவசங்கர் பாபா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து,அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துகு சிவசங்கர் பாபா அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments