70ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதியவருக்கு, 70 வகையான உணவுப் பதார்த்தங்களை செய்து கொடுத்து நெகிழவைத்த மருமகள்..!

0 6356
70ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர் : 70 வகையான உணவுப் பதார்த்தங்களை செய்து கொடுத்த மருமகள்..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 70 வது பிறந்தநாள் கொண்டாடிய முதியவருக்கு 70 வகையான உணவுப் பண்டங்களை செய்து கொடுத்து நெகிழவைத்துள்ளார் அவரது மருமகள்.

கமுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வரும் கணேசன் என்ற அந்த முதியவர், மனைவி, மகன், மருமகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கணேசன் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக இன்று தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், மிளகு சாதம், வடை, பாயசம், என அவரது 70வது பிறந்தநாளுக்கு 70 வகையான உணவுப் பதார்த்தங்களை செய்துள்ளார் மருமகள் சரண்யா.

மருமகளின் இந்த செயலால் நெகிழ்ந்து போன கணேசன் நா தழுதழுக்க அவருக்கு நன்றி கூறினார்.

வீட்டிலிருக்கும் பெரியவர்களை கவனிக்க மனமின்றி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு, கூட்டுக்குடும்ப முறையை சிதைத்து வரும் தலைமுறை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ஒருசிலர் நம்பிக்கையூட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments