எத்தனாலை உபயோகிக்கும் flex engine களுக்கு அனுமதி அளிக்க முடிவு - சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

0 2968
எத்தனாலை உபயோகிக்கும் flex engine களுக்கு அனுமதி அளிக்க முடிவு - சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

ழக்கமான பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்குப் பதிலாக எத்தனாலை உபயோகிக்கும் flex engine களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரசின் திட்ட அறிவிப்பு 3 மாதங்களில் வெளியாகும் என அவர் தெரிவித்திருக்கிறார். வேளாண் விளைபொருட்களில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலை பயன்படுத்தி இயங்கும் வாகன எஞ்சின்கள், பிரேசில், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

BMW, Mercedes Toyota பொன்ற பெரும் வாகன நிறுவனங்கள், மாற்று எரிபொருளில் ஓடும் கார்களை தயாரிக்க உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விலை குறைவான, மாசு ஏற்படுத்தாத எத்தனாலை பயன்படுத்தி, பெட்ரொலியம் இறக்குமதியை நம்பி இருக்கும் நிலைமையை குறைக்கலாம் எனவும் கட்காரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments