ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள போராளி முகாம்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

0 2168
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள போராளி முகாம்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

ராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகளின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மற்றும் நிலைகளின் மீது கடந்த ஏப்ரல் முதல் 5 முறை நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் குண்டுகளை வீசியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்  தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதிலில் உயிரிழப்பு ஏற்பட்டதா என தகவல் எதுவும் வெளியாகவில்லை. போராளி முகாம்கள் மீது F-15 மற்றும் F-16 விமானங்கள் மூலம் குண்டு வீசி விட்டு விமானிகள் பாதுகாப்பாக திரும்பி வந்து விட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்கா இந்த விமான தாக்குதலை நடத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments