உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு முதல் தங்கம்

0 4328
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு முதல் தங்கம்

லகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 30 வயது இந்திய வீராங்கனை, ரஹி சர்னோபாத் (Rahi Sarnobat), 25 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்.

குரேஷியா நாட்டின் ஒசிஜெக் நகரில், ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.

இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிரிவில், இந்திய வீராங்கனை, ரஹி சர்னோபாத், 39 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றுள்ளார். 

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இது. 25 மீட்டர் பிரிவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் 7ஆம் இடம் பிடித்தார்.

இந்த போட்டிக்குப் பிறகு இந்திய வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments