எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

0 1734
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் டெபாசிட் மிஷின்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட நூதனக் கொள்ளை சம்பவத்தில் 2-ஆவதாக பிடிபட்ட கொள்ளையன் வீரேந்தரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை ஹரியானைவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட அமீர் அர்ஸை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று எப்படி பணம் திருடப்பட்டது என கொள்ளையனை நடித்துக் காட்டச் செய்து போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில், மற்றொரு கொள்ளையன் வீரேந்தரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள போலீசார், 3-ஆவதாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் நசீம் உசேனை ஹரியானாவில் இருந்து இன்று சென்னை கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments