காவல்நிலையத்திற்கே சென்று ரகளை..! நான்கு குடிகார சண்டியர்களும் நல்லவிதமாக நடத்திய 4 போலீஸ்காரர்களும்

0 2890
காவல்நிலையத்திற்கே சென்று ரகளை..! நான்கு குடிகார சண்டியர்களும் நல்லவிதமாக நடத்திய 4 போலீஸ்காரர்களும்

திருப்பத்தூர் அருகே, அப்பன்-மகன் உள்ளிட்ட நான்கு குடிகார சண்டியர்கள், கழுத்துவரை குடித்து விட்டு, காவல் நிலையத்திற்கே சென்று போலீசாரை அவதூறாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பத்தூரை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்த நரசிம்மன், அவரது மகன் புருஷோத்தமன், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், பாலாஜி ஆகியோர் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

நேற்று பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் சென்று அனைவரும் களைந்து செல்லும்படி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், அந்த 4 பேரும் கழுத்து வரை குடித்து விட்டு காவல் நிலைய வாசலில் தகராறு செய்துள்ளனர்.

காவல்நிலையத்தில், காக்கி சீருடையில் இருப்பவர்களிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் துளிகூட இன்றி, சக குடிகாரர்களிடம் ரகளை செய்வது போல தள்ளாடினர்.

போதை தலைக்கேறிய நிலையில் எம்.எல்.ஏ ஒருவர் பெயரை சொல்லியும் மிரட்டியுள்ளனர்.

அதிலும், கேஸ் போடுறியா போட்டுக்கோ கவலையே இல்லை என தள்ளாடிய ஒரு குடிகாரன், பெண் போலீஸ் அதிகாரியைப் பார்த்து, நீ எங்க அம்மா மாதிரி, நான் உன் மகன் மாதிரி எனக் கூறி, மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் விரலை உயர்த்தி எச்சரித்துள்ளான்.

ஆனாலும் போலீசாரோ நான்கு பேரையும் பக்குவமாகப் பேசி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் பிறகு, ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு செய்ததாக புகார் வந்ததன் அடிப்படையில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தை மகனான நரசிம்மன் மற்றும் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments