வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1977

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

1,2ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments