தமிழகத்தில் இன்றோடு கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3732

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், சென்னையில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிற்பகலுக்கு பின்னர் தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் மொத்தம் 45 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 19 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 26-ந் தேதி நிலவரப்படி சென்னையில் 25லட்சத்து5ஆயிரத்து796 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக, சென்னையில் தடுப்பூசி தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் சென்னையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், போதிய அளவு கையிருப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், அதுவும் தீர்ந்துவிடும் என்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகின்றன.  புனேவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments