அமர்நாத் பனிலிங்க குகை கோயில் பூஜை இன்று முதல் ஆக.22 வரை ஆன்லைனில் ஒளிபரப்பு

0 3095

பிரசித்தி பெற்ற அமர்நாத் பனிலிங்க குகை கோவிலில் நடக்கும் பூஜை, புனஸ்காரங்களின் ஆன்லைன் ஒளிபரப்பு துவங்கி உள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை, காலை 6 முதல் 6.30 மணி, மாலை 5 முதல் 5.30 மணி என தினமும் இரண்டு முறை ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்படும்.

ஸ்ரீஅமர்நாத்ஜி ஆலய இணையதளம், மொபைல் செயலியில் இதை காணலாம். கொரோனா காரணமாக, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments