மும்பை தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு தீவிரவாத தாக்குதலா?

0 2844
மும்பை தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு தீவிரவாத தாக்குதலா?

மும்பையில் தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் நுழைவார்கள் என்று வந்த போன் அழைப்பினால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த ஹோட்டலின் வரவேற்பு பிரிவுக்கு நேற்று பிற்பகல் வந்த போன் அழைப்பில் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீவிரவாத தடுப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், ஸ்னைப்பர்கள் எனப்படும் துப்பாக்கி வீரர்கள் போன்றோர் தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தனர்.

அதே நேரம் ஹோட்டலுக்கு வந்த போன் அழைப்பு குறித்து விசாரித்த போது, அதில் பதிவான எண் மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விளையாட்டாக போன் செய்ததாகக் கூறவே, அவனைக் கடிந்து அறிவுரை கூறி வழக்குப் பதியாமல் சென்றனர்.

இதே ஹோட்டலில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments