யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து..! நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் வென்று செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் கால்இறுதிக்கு தகுதி

0 3244

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வென்று கால்இறுதிக்கு முன்னேறின...

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் மைதானத்தில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போடவில்லை.

68 வது நிமிடத்தில் செக் குடியரசின் tomas holes, 80-வது நிமிடத்தில் அதே அணியைச் சேர்ந்த Patrik Schick ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 2-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் செக் குடியரசு அணி வென்று கால்இறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெயினில் நடந்த மற்றொரு நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் 1-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் பெல்ஜியம் அணி வென்று நடப்பு சாம்பியன் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்தது.

42-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Thorgan Hazard கோல் அடித்து அணியின் வெற்றிக் கணக்கை தொடங்கி வைத்தார். கேப்டன் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி கோல் போட எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இறுதியில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்று பெல்ஜியம் கால்இறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments