புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு.!

0 3289
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு.!

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

புதுச்சேரி ராஜ் நிவாஸில் பிற்பகலில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோருக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்
பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரி வரலாற்றில் ரேணுகா அப்பாதுரைக்கு பின், 40 ஆண்டுகள் கழித்து, பெண் ஒருவர் மீண்டும் அமைச்சராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பங்கேற்றார்.

ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தனர். அதேநேரம், அமைச்சர் பதவி தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ ஜான்குமார், விழாவில் கலந்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments