இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 15087

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்‍.

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமக்களின் மிக முக்கிய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்‍. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்‍.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் இயக்குநர் ஷங்கரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments