"வாயை வெச்சு ஊதுடா" போலீசாரை பாடாய்படுத்திய போதை ஆசாமி

0 6454
"வாயை வெச்சு ஊதுடா" போலீசாரை பாடாய்படுத்திய போதை ஆசாமி

சென்னையில் வாகன சோதனையின்போது “பிரீத் அனலைசர்” கருவியில் வாயை வைத்து ஊதச் சொன்ன போலீசாரை போதை ஆசாமி ஒருவர் சுமார் அரைமணி நேரம் பாடாய்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் போதை ஆசாமி ஒருவர் சிக்கினார். அவர் எவ்வளவு மது குடித்திருக்கிறார் என்பதை அறிய “பிரீத் அனலைசர்”எனப்படும் சுவாசக் கருவியில் குழாயைப் பொருத்தி ஊதுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நபர், குழாயில் வாயை வைக்காமல் மேலோட்டமாக ஊதிவிட்டு, கிளம்பத் தயாரானார். குழாயில் வாயை வைத்து ஊத வேண்டும் என போலீசார் பலமுறை கூறியும் போதை ஆசாமி மேலோட்டமாக ஊதி ஊதி போலீசாரைக் கடுப்பேற்றினார்.

காவலர் ஒருவர் மூலம் செயல்முறை விளக்கம் கொடுத்த பிறகும், குழாயில் உதடுகள் படாமல் ஊதிய அந்த போதை ஆசாமியால் போலீசார் நொந்து போயினர்.

நீண்ட நேரம் போராடியும் பலனின்றி போதை ஆசாமி மீது வழக்கு மட்டும் பதிந்து வாகனத்தைப் பறிமுதல் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments