தமிழ் மீதான அன்பு ஒருபோதும் குறையாது..! பிரதமர் மோடி பேச்சு...

0 3935
தமிழ் மீதான அன்பு ஒருபோதும் குறையாது..! பிரதமர் மோடி பேச்சு...

ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வீரர் வீராங்கனைகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்துள்ளதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அவர்களுக்குச் சமூக ஊடகங்களில் வாழ்த்துத் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் மிகப் பழைமையான தமிழ்மொழி மீது தமக்குள்ள முயற்சிகளும் அன்பும் ஒருபோதும் குறையாது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதத்துக்கு ஒருமுறை வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில், ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் செல்லும் வீரர் வீராங்கனைகள் இன்னல்களைக் கடந்து முன்னேறியதை எடுத்துக் கூறினார்.

பெரும்பாலோர் வேளாண் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், இளம் வயதில் வயல்களில் வேலை செய்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள முதல் இந்தியரான தமிழக வீராங்கனை பவானி தேவி பயிற்சியைத் தொடர்வதற்காக, அவர் தாய் நகைகளை அடகு வைத்துப் பணம் கொடுத்ததையும் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், திறந்த மனத்துடன் ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சீயர் பார் இந்தியா என்கிற ஹேஷ்டாக்கில் சமூக ஊடகங்களில் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தான் தமிழை உச்சரிக்கும்போது பிழை இருக்கக் கூடும் என்றும், ஆனால் தமிழ் மீதான தனது முயற்சிகளும் அன்பும் ஒருபோதும் குறையாது என்றும் தெரிவித்தார்.

உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ் என்றும், தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தான் பெருமதிப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உலகின் மிகப் பழைமையான மொழி நம் நாட்டிலுள்ளது என்பதில் இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments