கடனைத் திருப்பிக் கேட்ட ஆத்திரம்... குடும்பத்துக்கே விஷமாத்திரை கொடுத்த கொடூரம்

0 5564

ரோடு அருகே விஷமாத்திரையை சாப்பிட்ட 4 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் திட்டமிட்டு கொலை அரங்கேற்றப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த கருப்பணன், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, பணிப்பெண் குப்பாயி அம்மாள் ஆகியோர்  சனிக்கிழமை அவர்களது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களோடு, கருப்பணனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கல்யாண சுந்தரம் என்ற நபரும் அங்கு இருந்துள்ளார். அப்போது அங்கு டிப்டாப்பாக வந்த இளைஞன் ஒருவன், கொரோனா தடுப்பு முகாமிலிருந்து வருவதாகக் கூறி சத்து மாத்திரைகள் என 4 பேருக்கும் 4 மாத்திரைகளைக் கொடுத்துள்ளான்.

கல்யாணசுந்தரத்துக்கும் மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து நழுவியுள்ளார். மாத்திரையை கொடுத்த மர்ம இளைஞன் அவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளான். சிறிது நேரத்தில் மாத்திரையை சாப்பிட்ட 4 பேருக்குமே மயக்கம் வாந்தி ஏற்பட்டதில், மல்லிகா அங்கேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் மற்ற மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அடுத்தடுத்து மூதாட்டி குப்பாயி அம்மாள், தீபா என இரண்டு பேர் உயிரிழந்தனர். கருப்பணன் தொடர்ந்து கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேரும் சாப்பிட்ட மாத்திரை சத்து மாத்திரையல்ல, பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரை என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக தோட்டத்தில் கருப்பணன் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்த கல்யாண சுந்தரத்தையும் சபரி என்ற இளைஞனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கருப்பணனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கல்யாணசுந்தரம், அவரிடம் 13 லட்ச ரூபாய்க்கு மேல் கடனாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. கொடுத்த கடனைக் கேட்டு கருப்பணன் நெருக்கடி கொடுக்கவே, அவரை குடும்பத்தோடு கொல்ல கல்யாணசுந்தரம் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தனது உறவினர் மகனும் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவனுமான சபரி என்ற இளைஞனை ஏற்பாடு செய்து, கொரோனா முகாமிலிருந்து வருவதாகக் கூறி சத்து மாத்திரைகள் என விஷ மாத்திரைகளை கொடுக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கைதான கல்யாண சுந்தரம் சனிக்கிழமையன்று ஒன்றும் தெரியாதவர் போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments