சேலத்தில் காவலர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த இந்து முன்னணிப் பிரமுகர் கைது

0 2904
சேலத்தில் காவலர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த இந்து முன்னணிப் பிரமுகர் கைது

சேலத்தில் காவலர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த இந்து முன்னணிப் பிரமுகரும், அவர் நண்பரும் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரமங்கலத்தைச் சேர்ந்த இந்து முன்னணிப் பிரமுகர் செல்லப்பாண்டியன் வெள்ளியன்று சேலம் கொண்டலாம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் நண்பர் தமிழரசுடன் வந்தபோது வாகனத் தணிக்கை செய்த காவலர்கள் அவர்களைத்தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது காவலர்களுடன் தகராறு செய்த செல்லப்பாண்டியன் தீவைத்துக் கொளுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ நேற்று வெளியானது.

இதையடுத்துக் காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

தலைமறைவான இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் திருப்பூரில் பதுங்கி இருந்த செல்லப்பாண்டியன், அவர் நண்பர் தமிழரசு ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments