கொரோனா சிகிச்சையெல்லாம் வேணாம்... வீட்டுக்குள் புகுந்துகொண்டு அடம்பிடித்த முதியவர்..!

0 3525

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், சிகிச்சைக்கு வரமறுத்து வீட்டுக்குள் புகுந்துகொண்டு அடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் என்ற அந்த முதியவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை காலை யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு ஓடி வந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனை ஊழியர்கள் அழைத்தபோது மருத்துவமனையில் இருக்கத் தனக்கு அச்சமாக இருக்கிறது என்று வர மறுத்து கதவை உட்பக்கம் தாழிட்டுக்கொண்டு அடம் பிடித்தார்.

போலீசாரும் பொதுமக்களும் அதிகாரிகளும் சுமார் ஒரு மணி நேரம் முதியவரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக அவரை வெளியே கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments