தமிழகத்தின் சுமார் 30 மாவட்டங்களில் சதம் கடந்த பெட்ரோல் விலை

0 3613

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 99  ரூபாய் 49 காசுகளுக்கு விற்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 30 மாவட்டங்களில் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின் எரிபொருள் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 99.49 ரூபாய்க்கும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையைத் தவிர்த்த சுமார் 30 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 101 ரூபாய் 56 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், அரியலூர், கோவை, ஈரோடு, தேனி என பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பெட்ரோல் கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் அந்த மாவட்டங்களின் பிற பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த போக்குவரத்து செலவும் பெட்ரோல் விலையுடன் சேர்வதால், மாவட்டங்கள்தோறும் விலை மாறுபாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments