உறவினர்களுக்கு மட்டன் கறி போடாததால் மணப்பெண்ணை மாற்றிய மணமகன்

0 9857

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின் போது உறவினர்களுக்கு மட்டன் விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓடிசாவை  சேர்ந்த Ramakant Patra என்பவருக்கு கடந்த புதனன்று ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர் புடைசூழ வந்த Ramakant Patra வுக்கு மணமகள் வீட்டார் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்ட போது மட்டன் போடவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். பின்னர் அதே நாளில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை Ramakant Patra வுக்கு திருமணம் செய்து வைத்து ஊர் திரும்பி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments