அமெரிக்காவில் ராட்சத பலூன் மின்வயர்களில் உரசி தீப்பற்றிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி

0 4029

அமெரிக்காவில், ராட்சத பலூன் தீ பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque நகரில் ராட்சத பலூனில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். விமான நிலைய பகுதியில் பலூன் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மின்சார வயர்களில் உரசி தீ பற்றியது.

இந்த விபத்தில் ராட்சத பலூனில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த மின் விபத்தால் அங்கு 13 ஆயிரம் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments