நாடு முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்

0 2455

நாடு முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 32 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரத்து 649 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி உள்ளிட்ட 16 மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களில் தலா 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர்களில், தமிழ்நாட்டில் இதுவரை 48 லட்சம் பேர் முதல் டோஸ் மருந்தை செலுத்தியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் 2ம் டோஸ் மருந்தை செலுத்திக் கொண்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments