ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: தீவிரவாதி ஒருவன் கைது

0 2831
ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: தீவிரவாதி ஒருவன் கைது

ம்மு விமான நிலையத்தில் டிரோன்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டுவெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதல் என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து மாநிலக் காவல்துறை, இந்திய விமானப்படை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளும் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கை தடைச் சட்டத்தின் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தேசிய விசாரணை முகமையான என்ஐஏ அதிகாரிகளும் ஜம்மு விமான நிலையத்திற்கு வந்து விசாரணையைத் தொடக்கி உள்ளனர்.

திரிகூட நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மால் அருகே 5 கிலோ வெடிமருந்துகளுடன் தீவிரவாதி ஒருவன் பிடிபட்ட நிலையில், மேலும் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments