கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகர் மோகன்லால்

0 4746

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்பிய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'ஆராட்டு' படக்காட்சியின் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டு, பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம், வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு' என்று மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள், பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்றும் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments