சென்னையில் பட்டப்பகலில் இளம் வில்வித்தை வீரரின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி

0 3780

சென்னை ஐசிஎப்பில் பட்டப்பகலில் இளம் வில்வித்தை வீரரின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் விவகாரத்தில் சிக்கியதால் மூக்கு அறுபட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ஆதித்யா . 21 வயதான இவர் தமிழக அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று வந்துள்ளார். சனிக்கிழமை மதியம் ஐ.சி.எப் வடக்கு காலனி பகுதியில் பயிற்சிக்காக ஆதித்யா சென்றுள்ளார்.

பயிற்சி முடித்து திரும்பிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர், ஆதித்யா விடம் அவசர தேவைக்கு எனக்கூறி ஆதித்யாவின் செல்போனை பெற்று பேசியுள்ளார் . பேசி கொண்டிருந்த பொழுதே திடீரென அந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆதித்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஆதித்யாவின் தலை முதுகு பகுதியில் வெட்டு விழுந்த நிலையில் ஆதித்தியாவின் மூக்கு மற்றும் வாய் பகுதி அறுந்து துண்டாக தொங்கியது.

அங்கு இருந்த பொதுமக்கள் கற்களால் தாக்கவே அந்த மர்ம நபர் அங்கிருந்து புல்லட் வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.சி.எப் போலீசார் ஆதித்யாவை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.

இத்தனை கொடூர தாக்குதல் நடந்துள்ள நிலையில் ஆதித்தியா தரப்பில் யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில் இது பெண்ணுடனான காதல் விவகாரமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் பட்டபகலில் நடைப்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments