சீறும் சிறுத்தைக்கு சேலையில் வேலிகட்டிய வனத்துறையினர்..! சிக்கியதும் செத்துப்போன பரிதாபம்..!

0 4991
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த சிறுத்தையை சேலையை வேலியாக கட்டி வலை வீசி பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காயம்பட்டு சீறிய சிறுத்தை பிடிபட்டவுடன் பலியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த சிறுத்தையை சேலையை வேலியாக கட்டி வலை வீசி பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காயம்பட்டு சீறிய சிறுத்தை பிடிபட்டவுடன் பலியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சாலையை பார்க்காமல் சேலையை பார்த்தால் விபத்தில் சிக்க நேரிடும் என்ற வாசகம் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, வனத்தில் உலவும் சிறுத்தைக்கும் பொருந்தும் என்பது போன்ற ஒரு சம்பவம் பழனி அருகே நிகழ்ந்துள்ளது.

வீடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் நுழைந்துவிட்டால் அடங்க மறுத்து தாவிக்குதித்து பாய்ந்து ஓடுவது சிறுத்தைகளின் வழக்கம், அந்தவகையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து பழனியை அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள மயில்சாமி என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்த சிறுத்தையோ அமைதியாக படுத்திருந்தது. எப்போதும் அடங்க மறுக்கும் குணம் கொண்ட சிறுத்தை, அப்பாவியாக படுத்திருந்ததால் அது எங்கோ கடுமையாக அடிவாங்கி வந்தது போல காணப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். அந்த சிறுத்தை உதிர்ந்த இலைகளோடு பதுங்கி இருந்ததால் அதனை பிடிக்க மாற்று ஏற்பாடாக வலை விரித்து பிடிக்க முடிவு செய்தனர்.

சிறுத்தையை பெரிய வலை விரித்து பிடிக்க முடிவு செய்தனர். பெரிய தோப்புக்குள் அடங்க மறுத்து அத்துமீறினால் சிறுத்தை எளிதாக தப்பிவிடும் என்பதால் வனத்துறையினர் சாமர்த்தியமான நடவடிக்கை ஒன்றை கையாண்டனர். அதன்படி அந்த சிறுத்தையை சுற்றி சேலையை கொண்டு சுவர் போன்ற மாய வேலி ஒன்றை அமைத்தனர்.

காயத்துடன் படுத்திருந்த அந்த சிறுத்தைக்கு, தான் ஒரு சுவருக்குள் படுத்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டு ஒரு பக்கம் தீயணைப்புத்துறையினரும், மறுபக்கம் வனத்துறையினரும் கையில் நீண்ட வலையுடன் உள்ளே புகுந்தனர். வனத்துறையினரின் காலடிச்சத்தம் கேட்டு சீறிய சிறுத்தை அடுத்த நொடியே சேலையை சுவர் என நம்பி, வலையை நோக்கி பாய்ந்து வசமாக சிக்கிக் கொண்டது.

சிறுத்தையின் வயிற்று பகுதியில் கடுமையான காயம் இருந்ததால் அதனை வலையுடன் சுருட்டி பத்திரமாக சிகிச்சைக்கு தூக்கிச்சென்றனர்.

கால்நடைத்துறை மருத்துவர்கள் சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் உடல் நிலை சீராகும் வரை உடுமலை காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் மூன்று வயதுள்ள அந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கால்நடை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சேலையை வேலியாக்கி சிறுத்தையை வலையில் சிக்கவைத்த வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தைக்கு காயம் ஏற்பட என்ன காரணம் ? என்று விசாரித்து வருகின்றனர். அதேநேரத்தில் நாட்டில் மன்னாதி மன்னர்களே சேலையில் சிக்கி மண்ணை கவ்வியிருக்கும் நிலையில் சிறுத்தை எல்லாம் சாதாரணம்..! வனத்துறையினரின் டெக்னிக் எப்போதும் வேற லெவல் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments