மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்யுமாறு செல்லூர் ராஜூவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பு

0 5384
மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்யுமாறு செல்லூர் ராஜூவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பு

நாகப்பட்டிணத்தில், அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை சுட்டிக் காட்டிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதனை பார்த்த பின் மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்யுமாறு ட்விட்டரில் சவால் விட்டுள்ளார்.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் தான் காரணம் என அப்போதைய அதிமுக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ, இதை பற்றி அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களிடமோ அல்லது உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்திதெளிய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments