தமிழ்நாட்டில் மேலும் 5415 பேருக்கு கொரோனா..

0 5055
தமிழ்நாட்டில் மேலும் 5415 பேருக்கு கொரோனா..

 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு  இறங்குமுகத்தில் தொடரும் நிலையில், 7 மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் கூட,  உயிரிழக்கவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 415 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. 16 வயது நெல்லை சிறுமி, 17 வயது தேனி சிறுவன், 100 வயது கடலூர் முதியவர் உள்பட ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்தனர்.

7 ஆயிரத்து 661 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில்  671 பேரும்,  ஈரோட்டில் 574, திருப்பூரில் 337, சென்னையில் 314 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 924 பேர் கொரோனாவுக்ரு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments