மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 15,000 கன அடியாக அதிகரிப்பு

0 2545
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குக் காவிரியாற்றில் ஜூன் 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனப் பகுதிகளில் மழைப் பொழிவு, நீர்த்தேவை ஆகியவற்றைப் பொறுத்து அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க அல்லது குறைக்கப்படும்.

இப்போது பாசனத்துக்கு நீர்த் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்குப் பத்தாயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88 புள்ளி 6 அடியாகவும், நீர் இருப்பு 51 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஐயாயிரத்து 455 கன அடியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments